அருள்மிகு வெண்ணீறுடையார் சாஸ்தா

படலையார்குளம், களக்காடு, திருநெல்வேலி மாவட்டம்.

வரலாறு

      

களக்காடு படலையார்குளம் வெண்ணீறுடையார் சாஸ்தா கோவில் தோன்றிய வரலாறு

இராதாபுரம் என்றழைக்கப்படும் இராஐ இராஐசோழபுரத்தில் வெள்ளாளர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். அச்சமயம் வரகுணபாண்டீஸ்வர் உடணுறை நித்திய கல்யாணி அம்மனுக்கு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு பெரியசாமி பிள்ளை மற்றும் உதிரவாசம் பிள்ளை விழாக்குழுவினர் தலைவராக இருந்தனர்.

இத்திருக்கோவிலுக்கு கொடி மரம் இல்லாதகாரணத்தினால் கொடி மரம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு இருவரும் சிங்கம்பட்டி சென்று ராஜாவிடம் முறையிட்டனர் காரணம் என்னவெனில், சிங்கம்பட்டி வம்சாவழியினரே திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கும், தென்காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கும் கொடி மரம் வழங்கியிருக்கிறார்கள்.


சிங்கம்பட்டி மன்னரிடம் முறையிட்ட பின்பு சிங்கம்பட்டியின் அப்போதைய மன்னர் சிவசங்கர தீர்த்தபதி தென் திசை காவலுக்கு அதிபதியான சிவனனைந்தபெருமாள் தேவரை அனுகுமாறு மடல் வரைந்து அனுப்பிவைத்தார். இருவரும் சிவனனைந்தபெருமாள் தேவரிடம் மன்னர் கொடுத்து அனுப்பிய மடலை கொடுத்து முறையிட்டனர். உடனே சிவனனைந்தபெருமாள் தேவர் அவர்கள் தன்மக்களை அனுப்பி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து மரம் வெட்டி வரச்செய்தார்.

அவ்வளவு பெரிய கொடி மரத்தை தூக்கி சுமந்த பெருமை சிவனனைந்தபெருமாள் தேவரின் புதல்வர்களின் தோள்களுக்கே உரியதாகும். பிறகு கொடி மரத்தை தூக்கி செல்ல பலதடைகள் வந்ததால் பெரியசாமி பிள்ளையும். உதிரவாசகம் பிள்ளையும் மீண்டும் சிவனனைந்தபெருமாள் தேவரின் உதவியை நாடினர். உடனே சிவனனைந்தபெருமாள் தேவர் அவர்களின் புதல்வர்களை உடன் அனுப்பிவைத்தார் அவர்கள் கொடி மரத்தினை சுலபமாக எடுத்து செல்ல ஆற்றில் விட்டனர், அக்கொடி மரமானது களக்காடு அருகே கரை ஒதுங்கியது.

அந்த இடத்தில் களக்காடு பண்ணையாருக்கு சொந்தமான இடத்தில் கொடிமரத்தோடு வந்த தேவதைகள் சாஸ்தா ஐயன் வெண்ணீறுடையார் புடை சூழ அமர்ந்தனர். அந்த இடமே தற்போது படலையார்குளம் ஆகும்.


       சாஸ்தா /அய்யனார் வழிபாடு தமிழ் நாட்டில் சிறப்பாக பரவியுள்ளது. இடத்துகேற்ப இவ்வழிபாடு சின்ன சின்ன வேறுபாடுகளுடன் விளங்கினாலும் பூரணி-புஷ்கலை தேவிகள் மட்டும் பொதுவாக உள்ளனர். நெல்லையின் மேற்கு எல்லை சொரிமுத்தையனார் முதல் கிழக்கெல்லையில் உள்ள அய்யனார்கள் வரை பல சாஸ்தாகள் வழிபடப்படுகின்றனர். அவ்வகையில் வெண்ணீறுடையார் சாஸ்தாவும் ஒருவர்.


       சாஸ்தா வேளாண்மைக்கு உதவும் மழை தெய்வமாகவும், நோய் ,நோடி, பேய், பிசாசு போன்றவற்றில் இருந்து ஊரைக்காக்கும் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார். பெருங்குடி, படலையார்குளம், இருக்கந்துறை போன்ற ஊர்கள் ஒரு காலத்தில் பெருநகரங்களாகவும் அங்கிருந்து குடிபெயர்ந்தவர்களுக்கும்,அங்கு குடியேறியவர்களும் நிலத் தெய்வங்களாக விளங்குகின்றன இக்கோயிலில் சாஸ்தாவோடு துணை தெய்வங்களும் உண்டு. சாஸ்தாவுக்குச் சைவ பூசையும் துணை தெய்வங்களுக்கு அசைவ பூசையும் உண்டு.

சாஸ்தா குலத்தினை காக்கும் தெய்வம். இதுவே நமக்கு எளிதில் அருள் தரும், மற்ற தெய்வங்களின் பலன்களையும் பெற்று தரும். எமன் கூட சாஸ்தாவின் அனுமதி பெற்று தான் ஒருவரின் உயிரை எடுக்க முடியும். குடும்ப நலனுக்கு முக்கிய தெய்வமான அருள்மிகு வெண்ணீறுடையார் சாஸ்தாவை எந்நாளும் குடும்பத்துடன் சென்று பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து, பொங்கள் இட்டு ஒற்றுமையுடன் வழிப்பட்டால் புன்னிய பலன்களோடு, முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். குறிப்பாக பங்குனி உத்திரம் நாளில் செய்யப்படும் வழிபாடு மிகவும் விசேஷமானது.

புகைப்படங்கள்

Contact

Our Address

Arulmigu Venneerudaiyar sastha Thirukovil,Padalaiyarkulam,Kalakaadu

Email Us

venneerudayarsastha@gmail.com

Call Us

MURGAN C

+91 94432 06518